முறைகேடு புகாரில் சிக்கிய எ.வ.வேலுவுக்கு சம்மன்… இரவோடு இரவாக செக் வைத்த லஞ்ச ஒழிப்புத்துறை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

முறைகேடு புகாரில் சிக்கிய எ.வ.வேலுவுக்கு சம்மன்… இரவோடு இரவாக செக் வைத்த லஞ்ச ஒழிப்புத்துறை..!!

Published

on

முறைகேடு புகாரில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை தற்போது அதிகாரப்பூர்வமாகச் சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த வாரம் எ.வ.வேலுவுக்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையில், கணக்கில் வராத ₹40 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் முக்கிய டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சோதனைகளின் தொடர்ச்சியாக, லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் கரூரில் சாலை அமைக்காமலேயே ₹3.23 கோடி முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையின் ஒரு பகுதியாகவே இந்தச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதால், அவர் உடனடியாகக் கைது செய்யப்பட வாய்ப்பில்லை என்று லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in