LATEST NEWS
BREAKING: வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது.. காலையிலேயே ஹேப்பி நியூஸ்…!!
மேற்காசியாவில் நிலவி வந்த போர் பதற்றம் மற்றும் அமெரிக்கா-ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம் காரணமாக, எண்ணெய் இறக்குமதி மற்றும் விநியோகக் கட்டுப்பாடுகளை மத்திய அரசு அண்மையில் நீக்கியது. இதன் எதிரொலியாக, சென்னையில் இன்று முதல் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடையுள்ள காஸ் சிலிண்டர் விலை ரூ.172.50 கணிசமாகக் குறைக்கப்பட்டு, ரூ.3,106-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து உயர்ந்து வந்த வணிக சிலிண்டரின் விலை தற்போது குறைந்திருப்பது உணவகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
அதேவேளையில், பொதுமக்களின் பட்ஜெட்டைத் தீர்மானிக்கும் வீடுகளுக்கான 14.2 கிலோ எடையுள்ள சமையல் காஸ் சிலிண்டரின் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த வீட்டு உபயோக சிலிண்டர் முந்தைய விலையான ரூ.957.50-க்கே (சில பகுதிகளில் ரூ.928.50) தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வணிக ரீதியிலான சிலிண்டர் விலை குறைந்தாலும், வீட்டு உபயோக சிலிண்டர் விலை நிலையாகவே நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
