அடுத்த விக்கெட் ரெடி..? ஆளுநர் மாளிகையில் இருக்கும் அந்த ஃபைல்… அடுத்த ஆட்டத்திற்கு தயாராக இருக்கும் ED… விக்கித்து நிற்கும் செந்தில் பாலாஜி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடுத்த விக்கெட் ரெடி..? ஆளுநர் மாளிகையில் இருக்கும் அந்த ஃபைல்… அடுத்த ஆட்டத்திற்கு தயாராக இருக்கும் ED… விக்கித்து நிற்கும் செந்தில் பாலாஜி..!!

Published

on

திமுக முன்னாள் அமைச்சர்கள் வ. செந்தில் பாலாஜி மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிரான சொத்து குவிப்பு மற்றும் பணமோசடி வழக்கு விசாரணைகளைத் தீவிரப்படுத்த அமலாக்கத்துறை அனுமதி கோரியுள்ளது. இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்குகளை விசாரிக்க ஆளுநரின் ஒப்புதலைப் பெற தவெக தலைமையிலான தமிழக அரசு தீவிரமாக வலியுறுத்தி வருகிறது. இருப்பினும், ஆளுநர் மாளிகையிலிருந்து இதற்கான கோப்புகளுக்கு இன்னும் இறுதி ஒப்புதல் அளிக்கப்படாமல் பரிசீலனையில் வைக்கப்பட்டுள்ளது.

ஆளுநரின் ஒப்புதல் கிடைத்தவுடன் அடுத்தகட்டமாக இவர்களுக்கு எதிராகக் கைது நடவடிக்கை வரை செல்ல தவெக அரசு திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் செய்திகள் பரவி வருகின்றன. அரசு தரப்பில் கொடுக்கப்படும் இந்த அவசர அழுத்தம் மற்றும் அடுத்தடுத்து வரவிருக்கும் சட்டரீதியான நெருக்கடிகள் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in