LATEST NEWS
பரபரப்பு..! அதிமுக MLA-க்கள் அடுத்தடுத்து ராஜினாமா… உண்மையான காரணம் என்ன..? போட்டுடைத்த அமைச்சர் நிர்மல் குமார்…!!
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்து வருவது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொடர் விலகல்களுக்குப் பின்னணியில் உள்ள பல்வேறு காரணங்களை அரசியல் விமர்சகர்கள் விவாதித்து வருகின்றனர். குறிப்பாக, தற்போதைய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் இது குறித்துப் பேசுகையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதவியுடன் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வர நினைத்ததே, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்து தங்களது பதவிகளை அடுத்தடுத்து ராஜினாமா செய்ய முக்கியக் காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
அமைச்சரின் இந்தக் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில், சமீபத்தில் அதிமுகவிலிருந்து விலகிய முக்கிய நிர்வாகிகளான எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோரும் இதே போன்றதொரு குற்றச்சாட்டையே கட்சியின் தலைமை மீது முன்வைத்துள்ளனர். அதிமுகவிற்கும் திமுகவிற்கும் இடையே திரைமறைவில் நடக்கும் இத்தகைய சமரச முயற்சிகளால் அதிருப்தியடைந்தே சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
