LATEST NEWS
தவெக எம்எல்ஏ-விடம் ரூ.35 கோடி பேரம்.. செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் 3 பேர் கைது – தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு…!!
ஊத்தங்கரை தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம், சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு ஆதரவாக செயல்பட ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாக காவல்துறை தரப்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தன்னிடம் ஐடிபிஎஸ் திருநாவுக்கரசு என்பவர் இந்த பெரும் தொகையை பேரம் பேசியதாக எம்எல்ஏ இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது.
இந்த புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல்துறை, வழக்கில் தொடர்புடைய ஐடிபிஎஸ் திருநாவுக்கரசு, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவர்களாக கருதப்படும் நரேஷ் மற்றும் தியாகராஜன் ஆகிய மூன்று பேரையும் அதிரடியாக கைது செய்துள்ளது. இவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், சட்டமன்ற அரசியல் நகர்வுகளுக்காக இந்த பேரம் பேசப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இவ்விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் பெயரும் அடிபடுவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. தவெக எம்எல்ஏ-வை வளைக்க முயன்ற வழக்கில் கைதானவர்களுக்கும், செந்தில்பாலாஜிக்கும் உள்ள தொடர்பு குறித்தும், இதன் பின்னணியில் உள்ள அரசியல் சதி குறித்தும் காவல்துறை தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருவதால் இந்த விவகாரம் மேலும் சூடுபிடித்துள்ளது.
