LATEST NEWS
ச்சீ.! ஸ்டாலினுக்கு கொஞ்சம் கூட வெட்கமாவே இல்லையா..? 40 நாட்களாகவே இந்த வேலை தான் நடக்குது.. அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு குற்றசாட்டு…!!
தமிழகத்தில் தவெக ஆட்சியை கவிழ்ப்பதற்காகக் கடந்த 40 நாட்களாகத் திட்டமிட்ட சதி வேலைகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் நிர்மல்குமார் குற்றம் சாட்டியுள்ளார். தவெக எம்.எல்.ஏ-க்களைக் குறிவைத்து, அவர்களைக் கட்சி மாறச் செய்வதற்காக ரூ. 10 கோடி முதல் ரூ. 50 கோடி வரை தி.மு.க தரப்பில் இருந்து பேரம் பேசப்பட்டுள்ளதாக அவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். தி.மு.க-வில் இருந்து பேரம் பேசப்படாத தவெக எம்.எல்.ஏ-க்களே யாரும் இல்லை என்றும், இந்த சட்டவிரோதப் பணப் பரிமாற்ற முயற்சிகளின் பின்னணியில் கரூரைச் சேர்ந்த சில முக்கிய நபர்கள் செயல்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினும், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து குறுக்கு வழியில் தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தீவிரமாக முயன்று வருகிறார்கள் என்று அமைச்சர் குற்றம் சாட்டினார். எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக்க மு.க.ஸ்டாலின் கேவலமான முறையில் முயற்சி செய்து தோற்றுப்போனதாகக் குறிப்பிட்ட அவர், இத்தகைய குதிரை பேரங்களில் ஈடுபடும் மு.க.ஸ்டாலினுக்குக் கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா எனக் கேள்வி எழுப்பியதுடன், அவர் அரசியலை விட்டே ஒதுங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் உத்தரவின் பேரில் தான் தவெக எம்.எல்.ஏ-க்களிடம் இந்த பணப் பேரம் நடத்தப்பட்டதாகவும் அவர் சாடினார்.
பண ஆசை காட்டுவது மட்டுமின்றி, தவெக-வின் ஒரு சில எம்.எல்.ஏ-க்கள் தி.மு.க தரப்பால் மிரட்டப்பட்டுள்ளதாகவும், அதில் பாதிக்கப்பட்ட ஒரு எம்.எல்.ஏ ஏற்கனவே காவல்துறையில் அதிகாரப்பூர்வமாகப் புகாரளித்துள்ளார் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நரேஷ் என்பவர், தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்துள்ளார். தவெக எம்.எல்.ஏ-க்களை யாராலும் விலை கொடுத்து வாங்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிய அமைச்சர், தவெக ஆட்சியை கவிழ்க்க இந்த குதிரை பேரத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்பூர்வமாக மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
