“பலி ஆடுகளாகும் பழைய தலைகள்?” 120-ஆகப் பிரியும் திமுக மாவட்டங்கள்… தோல்விக்குக் காரணமானவர்கள் மீது தயக்கம் ஏன்..? ஸ்டாலினுக்குப் பறந்த அதிர்ச்சி கடிதம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பலி ஆடுகளாகும் பழைய தலைகள்?” 120-ஆகப் பிரியும் திமுக மாவட்டங்கள்… தோல்விக்குக் காரணமானவர்கள் மீது தயக்கம் ஏன்..? ஸ்டாலினுக்குப் பறந்த அதிர்ச்சி கடிதம்…!!

Published

on

சமீபத்திய சட்டசபை தேர்தல் தோல்விக்குப்பின் திமுகவில் பெரிய அளவில் அமைப்பு ரீதியான மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், கட்சி அமைப்பைப் பலப்படுத்த மாவட்டச் செயலர்கள் மீது தயவுதாட்சணியமின்றி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அக்கட்சியின் நிர்வாகிகள் சிலர் மு.க.ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியுள்ள செய்தி வெளியாகியுள்ளது.

தேர்தல் பின்னடைவிற்கான மூலக்காரணங்களைக் கண்டறிய அமைக்கப்பட்ட கள ஆய்வு மற்றும் மறுசீரமைப்பு குழுக்கள், உட்கட்சி அமைப்பில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ளப் பரிந்துரைத்துள்ளன. இதன் முதற்கட்டமாக, தற்போதுள்ள 78 கட்சி மாவட்டங்களை 120-க்கும் அதிகமாகப் பிரித்து, ஒரு மாவட்டச் செயலரின் கீழ் 2 அல்லது 3 சட்டமன்றத் தொகுதிகள் மட்டுமே வருமாறு சீரமைக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது.

Advertisement

நீண்டகாலமாக ஒரே பதவியில் நீடிப்பவர்கள், வயது முதிர்ந்த நிர்வாகிகள் மற்றும் தேர்தல் பணிகளில் மந்தமாகச் செயல்பட்ட மாவட்டச் செயலர்களை விடுவித்துவிட்டு, அவர்களுக்குப் பதிலாக இளைஞரணியைச் சேர்ந்த புதிய முகங்களுக்கு அதிக வாய்ப்பளிக்கத் தலைமை முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேவேளையில், தோல்விக்குக் காரணமானவர்கள் மீது இன்னும் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் என நிர்வாகிகள் தங்களது கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர். ஈரோடு மாவட்டச் செயலர் தோப்பு வெங்கடாசலம் நீக்கப்பட்ட சம்பவத்தைச் சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், கட்சி நலன் கருதிப் பழைய நிர்வாகிகளை மாற்றிவிட்டுப் புதியவர்களுக்குப் பொறுப்புகளை வழங்கத் தலைமை தயங்கக்கூடாது என்றும் அதில் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in