LATEST NEWS
அடுத்த ஷாக்..! தவெக மாவட்ட செயலாளர் குற்றவாளி…நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!
கடந்த 2024ஆம் ஆண்டு விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டையொட்டி, நாகை புத்தூர் ரவுண்டானாவில் அனுமதியின்றி கட்சியின் பேனர் வைக்கப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நாகப்பட்டினம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், நாகை தவெக மாவட்ட செயலாளர் சுகுமாரை குற்றவாளி என இன்று தீர்ப்பளித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவின்படி, குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் சுகுமாருக்கு ஒரு மாதம் மெய்க்காவல் தண்டனை அல்லது ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தவெக கட்சியினர் மற்றும் உள்ளூர் அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
