LATEST NEWS
எச்சரிக்கை..! ஹெல்மெட் போடாம போனா இப்படித்தான் நடக்கும்… தம்பதியினருக்கு நேர்ந்த விபரீதம்… சாலைப் பள்ளத்தால் ஏற்பட்ட அதிர்ச்சி விபத்து.. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்…!!
குஜராத்தில் பலத்த மழையின் போது சாலைப் பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரை அறியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியினர், நிலைதடுமாறி முகத்தில் அடிபடும் வகையில் சாலையில் விழுந்து விபத்துக்குள்ளான அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மழைக்காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கும்போது அங்குள்ள ஆபத்தான பள்ளங்களை வாகன ஓட்டிகளால் அடையாளம் காண்பது கடினமாகிவிடுகிறது. இந்த விபத்தின் போது தம்பதியினர் இருவரும் தலைக்கவசம் அணியாமல் பயணித்தது விபத்தின் தீவிரத்தை அதிகப்படுத்தியுள்ளது.
வைரலாகி வரும் அந்த வீடியோவின் தொடக்கத்தில், தம்பதியினர் இருவரும் இருசக்கர வாகனத்தில் மிதமான வேகத்தில் சாதாரணமாகச் சென்று கொண்டிருப்பது தெரிகிறது. சாலை சற்று திரும்பும் ஒரு பகுதியில், தேங்கியிருந்த மழைநீருக்கு அடியில் இருந்த பெரிய பள்ளத்தில் இவர்களின் வாகனத்தின் முன் சக்கரம் திடீரென சிக்கியதால், வண்டியின் வேகம் தடைபட்டு இருவரும் தூக்கி வீசப்பட்டு குப்புற விழுந்தனர். இந்த விபத்தில் பலத்த அதிர்ச்சியடைந்த இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர், தலையில் ஏற்பட்ட பலத்த அடியினால் நிலைதடுமாறி எழுந்து நிற்கக் கூட முடியாமல் தவித்த காட்சிகளும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன.
சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோவை பகிர்ந்த நெட்டிசன்கள், மோசமான மற்றும் பழுதடைந்த சாலைகளை சீரமைக்காத அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கு குறித்து தங்களது கடுமையான கண்டனங்களையும் ஆத்திரத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் அரசு, இதுபோன்ற தரமற்ற சாலைகளை அமைக்கும் அதிகாரிகளுக்கு என்ன தண்டைனை வழங்கப்போகிறது என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. மேலும், விபத்து நடந்த நேரத்தில் அந்த வழியே சென்ற அவசரக்கால காவல் வாகனமும் (112 Police Vehicle) கூட உதவ முற்படாமல் கடந்து சென்றதாகப் பயனர்கள் பலரும் சுட்டிக்காட்டி அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
