CRIME
“அங்கிள் என்னை விட்ருங்க” மாற்றுத்திறனாளி சிறுமி என்றும் பாராமல்… முதலில் ஆட்டோ ஓட்டுநர்… அடுத்தடுத்து 5 நண்பர்கள் செய்த கொடூரம்… கேரளாவில் அதிர்ச்சி..!!
கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் 17 வயது மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். பள்ளிக்காரா பஞ்சாயத்தை சேர்ந்த அந்த சிறுமியை, முதலில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து, வெவ்வேறு நாட்களில் அந்த ஓட்டுநரின் நண்பர்கள் உள்ளிட்ட மேலும் நான்கு பேரும் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
சிறுமியின் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பைத் தொடர்ந்து நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவர் கடுமையான பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாயிருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த அதிர்ச்சிப் புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் குற்றவாளிகள் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள அந்த 5 பேரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
