“என்னை அவன் வாழ விடமாட்டான்…” மகள நல்லா பாத்துக்கோங்க..! துபாயில் இருந்த கணவருக்கு வந்த அந்த கடைசி மெசேஜ்… பின்னணியில் இருந்த டார்ச்சர்..!!! – cinefeeds
Connect with us

CRIME

“என்னை அவன் வாழ விடமாட்டான்…” மகள நல்லா பாத்துக்கோங்க..! துபாயில் இருந்த கணவருக்கு வந்த அந்த கடைசி மெசேஜ்… பின்னணியில் இருந்த டார்ச்சர்..!!!

Published

on

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள திருநந்திக்கரை பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ். துபாயில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வரும் இவருக்கு, அனிஷா என்ற மனைவியும், முதலாம் வகுப்பு படிக்கும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். அனிஷா அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஊழியராகப் பணிபுரிந்து வந்தார். அண்மையில் சொந்த ஊருக்கு வந்துவிட்டு மகேஷ் துபாய் திரும்பிய நிலையில், அனிஷாவிடம் ரப்பர் மரம் வெட்டும் தொழிலாளி ஒருவர் தொடர்ந்து தகராறு செய்து, தன்னுடன் பழகுமாறு வற்புறுத்தி கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தி வந்துள்ளார்.

தொழிலாளியின் இந்தத் தொடர் தொல்லையினால் கடுமையான மனவேதனை அடைந்த அனிஷா, ஒரு விபரீத முடிவை எடுத்தார். அதிகாலை நேரத்தில் துபாயில் இருக்கும் தன் கணவருக்கு உருக்கமான குறுந்தகவல் ஒன்றை அனுப்பினார். அதில், “நான் அவன் மேல் விருப்பப்பட்டு பழகவில்லை, என்னால் இனி வாழ முடியாது; என்னை அவன் வாழ விடமாட்டான். என்னை மன்னித்து விடுங்கள், மகளை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்தச் செய்தியைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மகேஷ், உடனடியாக மனைவியைத் தொடர்பு கொள்ள முயன்றும் பலனில்லாததால், பதற்றத்துடன் ஊரில் உள்ள தன் தந்தைக்குத் தகவல் தெரிவித்தார்.

Advertisement

மகேஷின் தந்தை மற்றும் உறவினர்கள் விரைந்து வந்து அனிஷாவின் அறைக் கதவை உடைத்துப் பார்த்தபோது, அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து குலசேகரம் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அனிஷாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான அந்த ரப்பர் தொழிலாளியின் தொடர் அச்சுறுத்தல் காரணமாகவே அனிஷா தற்கொலை செய்துகொண்டார் என்பது உறுதியானது. தற்போது தலைமறைவாக உள்ள அந்தத் தொழிலாளியைப் பிடிக்க போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in