LATEST NEWS
“விஜய் மூளை முட்டாளா, புத்திசாலியா?”.. முதலமைச்சர் விஜய்யை வளைத்து வளைத்து வறுத்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்… எகிறும் அரசியல் சூடு..!!
மக்களைத் தனது பேச்சுகளால் மூளைச்சலவை செய்வதில் முதலமைச்சர் விஜய் வென்று காட்டியிருப்பதாக அதிமுக மூத்த நிர்வாகி ஆர்.பி.உதயகுமார் மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு சமூக ஊடக வீடியோ பதிவில், முதலமைச்சர் விஜய்யின் மூளை முட்டாள்தனமானதா அல்லது புத்திசாலித்தனமானதா என்பது தமக்குத் தெரியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், நாட்டின் ஆட்சிக் கட்டிலில் அமர்வதற்கு வசீகரமான சினிமா வசனங்கள் மட்டுமே போதுமானது, கொள்கையோ அல்லது மக்களுக்கான பணிகளோ தேவையில்லை என்பதை விஜய் நிரூபித்துக் காட்டியுள்ளதாக அவர் சாடியுள்ளார்.
தொடர்ந்து முதலமைச்சர் விஜய்யை கிண்டல் செய்யும் தொனியில் பேசிய ஆர்.பி.உதயகுமார், வெறும் மூளைச்சலவை ஒன்றையே மூலதனமாகக் கொண்டு தமிழ்நாட்டில் அரசியல் செய்து வென்ற காட்டியிருக்கும் விஜய்க்குத் தான் தலை வணங்குவதாகப் பகடி செய்துள்ளார். மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு, அவர்களைத் தன் வசப்படுத்துவதில் விஜய் மிகச் சரியாகக் காய்களை நகர்த்தியுள்ளார் என்ற கோணத்தில் அவரது இந்த விமர்சனம் அமைந்துள்ளது. ஆர்.பி.உதயகுமாரின் இந்த அதிரடி வீடியோ பதிவு தவெக மற்றும் அதிமுக தொண்டர்களிடையே தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
