LATEST NEWS
இவ்வளவு நேரம் ஆகியும் ஏன் வரவில்லை..? குடிகார ஆசாமிகளுக்கு இறையாகிய சிறுமி… வசமாக சிக்கிய 2 நபர்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!
உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்திற்கு உட்பட்ட சார்ரா பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி ஒருவர், சந்தைக்குச் சென்று வருவதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாத காரணத்தால், பதற்றமடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர், காவல்துறையினர் மற்றும் உள்ளூர் மக்களின் தீவிர தேடுதலுக்குப் பிறகு, மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு வெற்று இடத்தில் அந்தச் சிறுமி மயக்க நிலையில் மீட்கப்பட்டார்.
சிறுமி மீட்கப்பட்ட இடத்திற்கு அருகிலேயே, மதுபோதையில் சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த இரண்டு நபர்களைக் காவல்துறையினர் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், சிறுமியின் மீது ஒரு குறிப்பிட்ட ரசாயனத்தை ஸ்ப்ரே செய்து அவரை மயக்க நிலைக்குக் கொண்டு சென்றதும், அதன் பிறகு அவரைக் கூட்டாகச் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததும் அம்பலமானது.
இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த அதிகாரப்பூர்வ புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் உடனடியாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதன்படி, இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட அந்த இரண்டு நபர்கள் மீதும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
