CRIME
கல்யாணமான 4 மாதத்தில் நேர்ந்த கொடூரம்!.. கர்ப்பிணிப் பெண் எடுத்த விபரீத முடிவு.. செய்தியைக் கேட்டு கணவன் செய்த காரியம்.. கேரளாவை உலுக்கிய சோக சம்பவம்..!!
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள எடத்வாவைச் சேர்ந்த சானுகுட்டன் என்பவருக்கும் ஹரிஷ்மா என்ற பெண்ணுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், சானுகுட்டன் வேலைக்காக தோஹா நாட்டிற்குச் சென்றுள்ளார். இந்நிலையில், 3 மாத கர்ப்பிணியாக இருந்த ஹரிஷ்மா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த அதிர்ச்சித் தகவலை அறிந்த சானுகுட்டன் உடனடியாக கேரளா திரும்புவதற்காக, தோஹாவிலிருந்து இணைப்பு விமானம் மூலம் பெங்களூரு வந்துள்ளார். அங்கிருந்து கொச்சி நெடும்பாசேரி விமான நிலையம் வரவேண்டிய அவரை அழைக்க உறவினர்கள் காத்திருந்த நிலையில், சானுகுட்டன் குறிப்பிட்ட விமானத்தில் வராததைக் கண்டு அதிர்ச்சியடைந்து அவரது செல்போனைத் தொடர்பு கொண்டும் பலனில்லை.
இதனையடுத்து பெங்களூரு விமான நிலைய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டபோது அவர் பெங்களூரு வந்தடைந்தது உறுதியானது. ஆனால், அதன் பிறகு அவர் எங்கு சென்றார் என்று தெரியாமல் மர்மமாக இருந்த நிலையில், பெங்களூருவில் உள்ள ஒரு விடுதியில் நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அங்கு விரைந்து சென்று பார்த்த சானுகுட்டனின் உறவினர்கள், இறந்தது சானுகுட்டன் தான் என்பதை உறுதிப்படுத்தி பெரும் அதிர்ச்சியை அடைந்தனர். மனைவி இறந்த துக்கம் தாங்காமல் பெங்களூரு விடுதியில் கணவனும் தற்கொலை செய்து கொண்ட இந்த சோகமான சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவர்களின் தற்கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
