CRIME
அங்கன்வாடியில் அசிங்கம்…! பிஞ்சு குழந்தைகள் முன்னே கள்ளக்காதலனுடன் சில்மிஷம்…. 4 வயது குழந்தையைப் பரிதவிக்க விட்டுவிட்டு…! நள்ளிரவில்ஓடிய கல்நெஞ்சத் தாய்..!!!
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பரம்பை பகுதியைச் சேர்ந்தவர் வேணு (31). இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வேறொரு மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தற்போது நான்கரை வயதில் ஒரு மகன் இருக்கிறான். சில மாதங்களுக்கு முன்பு வேணுவின் முயற்சியால், அவருடைய மனைவிக்கு கற்பகோடு பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஆசிரியர் வேலை கிடைத்துள்ளது.
அங்கன்வாடி மையத்தில் வேலைக்குச் சேர்ந்த இரண்டு மாதங்களிலேயே, பேருந்து ஓட்டுநராகப் பணிபுரியும் வில்வின் என்ற இளைஞருடன் அந்தப் பெண்ணிற்குப் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததோடு, அங்கன்வாடி மையத்தில் வைத்து கள்ளக்காதலனுடன் சேர்ந்து பாலியல் ரீதியான சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். இது அப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் தெரிய வந்துள்ளது. அவர்கள் கண்டித்தும், அதை பொருள் படுத்தாமல் குழந்தைகள் முன்பே முகச்சுளிப்பை ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த கள்ளக்காதல் விவகாரம் குறித்து வேணு தனது மனைவியைத் தட்டிக்கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த 12 சவரன் தங்க நகைகள் மற்றும் ₹50,000 ரொக்கப் பணத்தை எடுத்துக்கொண்டு, தனது நான்கரை வயது குழந்தையைப் பரிதவிக்க விட்டுவிட்டு அந்தப் பெண் தனது கள்ளக்காதலனுடன் தப்பியோடிவிட்டார். மேலும், கள்ளக்காதலன் வில்வின் தன்னை மிரட்டியதாகக் கூறி, தனக்கும் தன் குழந்தைக்கும் பாதுகாப்பு வழங்கக் கோரியும், திருடப்பட்ட நகைகளை மீட்டுத்தரக் கோரியும் வேணு நாகர்கோவில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
