CRIME
அடச்சீ.. பெற்ற மகள்களையே சீரழித்த தந்தை… 4 ஆண்டுகள் நடந்த கொடுமைக்கு.. முற்றுப்புள்ளி வைத்த தாய்..!!
குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டம், தலலா நகரைச் சேர்ந்த 52 வயதான தொழிலதிபர் ஒருவர், தனது சொந்த மகள்கள் இருவர் மற்றும் மைனர் மருமகள்கள் இருவர் என மொத்தம் நான்கு பெண்களை கடந்த நான்கு ஆண்டுகளாக பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களில் இவரது மகள்களுக்கு 17 மற்றும் 24 வயது என்றும், இவரது மனைவியின் சகோதரி மகள்களான இருவருக்கு 15 மற்றும் 16 வயது என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவரின் 50 வயதுடைய மனைவிக்கு கடந்த சில மாதங்களாகவே கணவரின் நடத்தை மீது சந்தேகம் இருந்துள்ளது. ஒரு தந்தை தன் சொந்த மகள்களிடமே தவறாக நடப்பாரா என்ற தயக்கத்தில் இருந்த அவர், இறுதியாக உண்மையை நேரில் கண்டு உறுதி செய்த பின்பு தலலா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் அந்த தொழிலதிபர் மீது பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் போக்சோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.
இதுகுறித்து வெராவல் கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சேதன் கட்டானா கூறுகையில், கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். முதற்கட்ட விசாரணையில் அவர் மாந்தோட்டங்கள் மற்றும் தங்கும் விடுதிகளை குத்தகைக்கு எடுக்கும் தொழிலில் மற்றும் நில வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர் என்பது தெரியவந்துள்ளது. தற்போது தடயவியல் சோதனைக்காக அவரது கைபேசி மற்றும் உடமைகளைப் பறிமுதல் செய்துள்ள போலீசார், பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் வாக்குமூலம் பெற்று மேலதிக விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
