LATEST NEWS
“இதை மட்டும் அவர் செய்தால்.. நான் விலகுகிறேன்”.. முதலமைச்சர் விஜய்க்கு ஆர்.பி. உதயகுமார் விடுத்த மரண சவால்.. பரபரக்கும் தமிழக அரசியல்..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் அவர்களுக்கு, அதிமுகவின் மூத்த நிர்வாகியும் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி. உதயகுமார் விடுத்துள்ள அதிரடி சவால் தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. செய்தியாளர்களைச் சந்தித்த அவர், முதலமைச்சர் விஜய் தனது கட்சியைச் சேர்ந்த 107 சட்டமன்ற உறுப்பினர்களின் முகத்தைப் பார்த்து, அவர்களின் பெயர்களைச் சரியாகச் சொல்ல வேண்டும் என்று பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இந்த சவாலோடு நிறுத்திக் கொள்ளாமல், “முதலமைச்சர் விஜய் ஒருவேளை தனது கட்சியின் 107 எம்.எல்.ஏ-க்களின் பெயர்களையும் முகத்தைப் பார்த்து சரியாகச் சொல்லிவிட்டால், நான் இந்த நொடியே எனது பொது வாழ்க்கையில் இருந்தே ஒட்டுமொத்தமாக விலகிக் கொள்கிறேன்” என்று மிக ஆக்ரோஷமாக அறிவித்துள்ளார். இவரின் இந்த பகிரங்க அறிவிப்பு தவெக மற்றும் அதிமுக தொண்டர்களிடையே தற்போதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ-க்கள் யார் யார் என்ற விபரம் கூட அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய்க்குத் தெரியாது என்று எதிர்க்கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இத்தகைய தொடர் அரசியல் விமர்சனங்களுக்கு இடையே, ஆர்.பி. உதயகுமார் நேரடியாக விடுத்துள்ள இந்த சவால் தமிழக அரசியலில் தவெக-விற்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையேயான மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
