“தீர்ப்பு எனக்கு சாதகமா வரணும்”.. நீதிபதிக்கே பில்லி சூனியம் வைத்த பெண்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்.. கர்நாடகாவை உலுக்கிய பகீர் பின்னணி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“தீர்ப்பு எனக்கு சாதகமா வரணும்”.. நீதிபதிக்கே பில்லி சூனியம் வைத்த பெண்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்.. கர்நாடகாவை உலுக்கிய பகீர் பின்னணி..!!

Published

on

கர்நாடகாவில் நிலத்தகராறு வழக்கு ஒன்றில் தனக்கு சாதகமாக தீர்ப்பு வர வேண்டும் என்பதற்காக, மஞ்சுளா என்ற பெண் நேரடியாக நீதிபதிக்கே பில்லி சூனியம் வைக்க முயன்ற வினோத விபரீத சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றத்தில் நடந்து வந்த தனது வழக்கு சாதகமாக முடிய வேண்டும் என நினைத்த அந்த பெண், மாந்திரீகத்தை நாடியுள்ளார். இதற்காக நீதிமன்ற அறைக்குள் ரகசியமாக நுழைந்த அவர், தீர்ப்பு வழங்கும் நீதிபதியின் இருக்கை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளை எள் மற்றும் சில மாந்திரீகப் பொருட்களைத் தூவியுள்ளார்.

அடுத்த நாள் பணிக்கு வந்த நீதிமன்ற அதிகாரிகள், நீதிபதியின் இருக்கையில் விசித்திரமான முறையில் வெள்ளை எள் தூவப்பட்டிருப்பதை கண்டு சந்தேகமடைந்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அங்கிருந்த CCTV கேமரா காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்தபோது, மஞ்சுளா என்ற அந்த பெண் நள்ளிரவில் நீதிமன்ற அறைக்குள் புகுந்து மாந்திரீக வேலைகளில் ஈடுபட்டது கச்சிதமாகப் பதிவாகியிருந்தது. ‘சொந்தக் காசில் சூனியம் வைப்பது’ என்ற பழமொழிக்கு ஏற்ப, நீதிபதியை வசியம் செய்ய நினைத்த அந்த பெண், CCTV ஆதாரங்களின் அடிப்படையில் போலீசாரால் கம்பி எண்ண வைக்கப்பட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in