LATEST NEWS
BREAKING: இந்தியா வரலாற்று வெற்றி.. ENG-ஐ அலறவிட்ட இந்திய வீராங்கனைகள்..!!
கிரிக்கெட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க லார்ட்ஸ் மைதானத்தில் (Lord’s), 142 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றுக்குப் பிறகு முதன்முறையாக 2026 ஜூலையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மகளிர் டெஸ்ட் போட்டி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த மைதானத்தில் நடைபெற்ற முதல் மகளிர் டெஸ்ட் போட்டி இதுவாகும். இந்த டெஸ்ட் போட்டியில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 270 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 285 ரன்கள் குவித்தது.
அதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி, இந்திய வீராங்கனைகளின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 170 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் 115 ரன்கள் பலமான முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 341 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. ஒட்டுமொத்தமாக 457 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களம் இறங்கிய இங்கிலாந்து மகளிர் அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 270 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்றுப் பெருமை மிக்க வெற்றியைப் பதிவு செய்தது.
