LATEST NEWS
அடேங்கப்பா..! பிரதமர் மோடியின் 12 வெளிநாட்டு பயணங்களுக்கு இத்தனை கோடி செலவா..? மத்திய அரசு அதிர்ச்சி தகவல்..!!
2026ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட 12 வெளிநாட்டுப் பயணங்களுக்குச் சுமார் 75 கோடி ரூபாய் செலவாகியுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. நாட்டின் பட்ஜெட் மற்றும் அரசுச் செலவினங்கள் குறித்த விவாதத்தின் போது இந்த அதிகாரப்பூர்வத் தகவல் வெளியிடப்பட்டது. இத்தொகை பிரதமரின் பாதுகாப்பு, விமானப் போக்குவரத்து மற்றும் இதர பயணச் செலவுகளை உள்ளடக்கியதாகும்.
இப்பயணங்களிலேயே அதிகபட்சமாக நார்வே நாட்டுப் பயணத்திற்காக 17.46 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் பயணத்திற்கு 11.92 கோடி ரூபாயும், சீஷெல்ஸ் நாட்டுப் பயணத்திற்கு 8.22 கோடி ரூபாயும் செலவாகியுள்ளதாக மத்திய அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
