LATEST NEWS
சினிமா இண்டஸ்ட்ரி மிஸ் பண்ண சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து உருகும் நெட்டிசன்கள் !
மெட்டி ஓலி என்ற சீரியலில் இருந்து வெற்றிகரமான நடிகைகளில் கிருத்திகாவும் ஒருவர், பின்னர் இது தெலுங்கில் மெட்டலா சவ்வாடி என அழைக்கப்பட்டது. திருமுருகன் இயக்கிய மெட்டி ஓலி பலரின் புகழ் பெற உதவியுள்ளது. அதன் பிறகு இவர் கால்வைத்த இடமெல்லாம் அட மழைதான் பல மெகா சீரியல்களில் நடித்து பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். தற்போது முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார்.
இவர் சீரியலில் ஒரு நல்ல சகோதரியாகவும், நல்ல மனைவியாகவும் நடித்து வந்தவர். இவர் நடித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘சின்னதம்பி’. இந்த சீரியல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. இதில் நடித்த பிறகுதான் பிரஜனுக்கு மிகப்பெரிய அடையாளம் கிடைத்தது. வழக்கம்போல் இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் நடிகை கிருத்திகா.
இவர் சீரியல் மட்டுமில்லாமல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றுள்ளார். சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் ஒரு ஹாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், இண்டஸ்ட்ரி உங்களை தவறவிட்டு விட்டது என்றும், செம்ம ஸ்ட்ரக்சர் என்றும் கமென்ட் செய்து வருகிறார்கள்.
