ஐயோ நெஞ்சே பதறுது..! “தொழிலதிபர்கள், VIP களுக்கு இரையாக்கப்பட்ட சிறுமிகள்” பென் டிரைவில் சிக்கிய அதிர்ச்சி வீடியோக்கள்… வாடகை வீட்டில் நடந்த பகீர் கொடூரம்… ரகசிய புகாரில் அம்பலமான பயங்கரம்..! – cinefeeds
Connect with us

CRIME

ஐயோ நெஞ்சே பதறுது..! “தொழிலதிபர்கள், VIP களுக்கு இரையாக்கப்பட்ட சிறுமிகள்” பென் டிரைவில் சிக்கிய அதிர்ச்சி வீடியோக்கள்… வாடகை வீட்டில் நடந்த பகீர் கொடூரம்… ரகசிய புகாரில் அம்பலமான பயங்கரம்..!

Published

on

ஜெம் கிரானைட் குழுமத்தின் தலைவரான 84 வயது தொழிலதிபர் வீரமணி, சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் கீழ் போக்சோ சட்டத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவருக்குக் கிடைத்த பென்டிரைவ் ஒன்றில், 13 வயது சிறுமியுடன் வயதான நபர் ஒருவர் பாலியல் குற்றத்தில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் இருந்துள்ளன. இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவில் அளிக்கப்பட்ட ரகசிய புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், வீடியோவில் இருந்த நபர் தொழிலதிபர் வீரமணி என்பது உறுதி செய்யப்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போலீஸாரின் தொடர் விசாரணையில், சென்னை தேனாம்பேட்டை பகுதியில் வீரமணி ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதன் நிர்வாகப் பொறுப்பை சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கன் என்பவர்களிடம் ஒப்படைத்தது தெரியவந்தது. அந்த ரகசிய வீட்டிற்குச் சிறுமிகள் அழைத்து வரப்பட்டு பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பிற தொழிலதிபர்களிடமும் இந்தச் சிறுமிகள் பாலியல் தேவைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அதிர்ச்சித் தகவலும் அம்பலமாகியுள்ளது.

Advertisement

இதனைத் தொடர்ந்து வீரமணி, சாந்தி மற்றும் மகேந்திர சிம்கன் ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் வழக்குடன் தொடர்புடைய பல முக்கியப் புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சிறுமிகள் சம்பந்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு என்பதால், இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற பிரமுகர்களைக் கண்டறிய அடுத்தகட்ட விசாரணையைப் போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in