LATEST NEWS
அண்ணே இங்கே வாங்க… டிராபி கொண்டாட்டத்தின்போது அபிஷேக் சர்மாவின் ஹேர்ஸ்டைலை சரி செய்த வைபவ் சூர்யவன்ஷி… இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ..!!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி முழுமையாகக் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. இந்த வரலாற்று வெற்றிக்குப் பிறகு மைதானத்தில் நடைபெற்ற கோப்பை வென்ற கொண்டாட்டத்தின் போது, இந்திய அணியின் இளம் வீரர்களான வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அபிஷேக் சர்மா இடையே நடந்த ஒரு கலகலப்பான நெகிழ்ச்சிச் சம்பவம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்திய அணியின் வீரர்கள் அனைவரும் ஒன்று கூடி டிராபியை ஏந்தி வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அணியின் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மாவின் ஹேர் ஸ்டைலை இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி சரி செய்து விட்டுள்ளார். இந்த ஜாலியான மற்றும் கியூட் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு, தற்பொழுது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இந்திய அணியின் டிரெஸ்ஸிங் ரூமில் வீரர்களிடையே இருக்கும் நெருக்கமான நட்பையும், சகோதரத்துவத்தையும் வெளிப்படுத்தும் விதமாக இந்த விளையாட்டுத் தனமான தருணம் அமைந்துள்ளது. டி20 கிரிக்கெட்டில் அதிரடி நாயகனாக உருவெடுத்துள்ள அபிஷேக் சர்மா மற்றும் இந்திய அணியின் மிக இளம் வீரர்களில் ஒருவரான வைபவ் சூர்யவன்ஷி ஆகியோரின் இந்த பாசமான செயல், ரசிகர்களுக்கு இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் மறக்க முடியாத ஒரு அழகான தருணமாக மாறியுள்ளது.
