திக் திக்..! வீட்டு மாடியில் ஏறி அலப்பறை செய்த சிங்கங்கள்… தெறித்து ஓடிய வீட்டின் உரிமையாளர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

திக் திக்..! வீட்டு மாடியில் ஏறி அலப்பறை செய்த சிங்கங்கள்… தெறித்து ஓடிய வீட்டின் உரிமையாளர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

Published

on

குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கூரை மீது சிங்கக் குடும்பம் ஒன்று பல மணி நேரம் ஓய்வெடுத்த அரிய மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. கிர் சோம்நாத் மாவட்டத்தின் ஜுத்வாட்லி கிராமத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டின் மேல்தளக் கூரையில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. வீட்டின் கூரை மீது சிங்கங்கள் தஞ்சம் புகுந்ததைக் கண்ட வீட்டு உரிமையாளரும், கிராம மக்களும் கடும் அதிர்ச்சியும் பீதியும் அடைந்தனர்.

அப்பகுதியில் பெய்த மழையிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்காக இந்த சிங்கக் குடும்பம் வீட்டின் கூரை மீது ஏறி அமர்ந்திருந்ததாகக் கருதப்படுகிறது. ஒரு ஆண் சிங்கம், மூன்று பெண் சிங்கங்கள் மற்றும் இரண்டு சிங்கக் குட்டிகள் என மொத்தம் ஆறு சிங்கங்கள் இந்த குழுவில் இடம்பெற்றிருந்தன. இந்த சிங்கக் குடும்பம் வீட்டின் மொட்டை மாடிக் கூரையில் மிக இயல்பாக அமர்ந்து ஓய்வெடுக்கும் அரிய காட்சியை அந்த வீட்டின் உரிமையாளர் தனது மொபைல் கேமராவில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

ஜுத்வாட்லி கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால், இப்பகுதி கிராம மக்கள் காடுகளிலிருந்து சிங்கங்கள் வெளியேறி குடியிருப்புப் பகுதிகளுக்குள் வருவதை அடிக்கடி காண்பது வழக்கம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், வீட்டின் கூரை மீதே ஒரு பெரிய சிங்கக் குடும்பமே வந்து பல மணி நேரம் அமர்ந்திருந்த இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் தற்போதைய முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in