CRIME
“பெற்றோருக்கு தெரியாமல் காதல் திருமணம்..” குடும்பச் செலவு கேட்ட மனைவியை 3 நாட்கள் வீட்டிற்குள் வைத்து கணவர் செய்த கொடூரம்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!
ஒடிசாவைச் சேர்ந்த அனுசூயா மற்றும் சாகர் சந்திர ராவத் ஆகிய இருவரும் தங்களது பெற்றோருக்குத் தெரியாமல் காதல் திருமணம் செய்து கொண்டு, பிழைப்பிற்காகப் பெங்களூருவில் குடியேறி வசித்து வந்துள்ளனர். பெங்களூருவில் உள்ள ஒரு ஹோட்டலில் சமையல் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்த சாகரிடம், கடந்த ஆகஸ்ட் 11 அன்று அவரது மனைவி அனுசூயா சம்பளம் மற்றும் குடும்பச் செலவுகள் குறித்துக் கேட்டுத் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த சாகர் தனது மனைவி அனுசூயாவை கொடூரமான முறையில் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
கொலை செய்த பின்னர் மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதற்காக, மனைவியின் சடலத்தை மூன்று நாட்கள் வீட்டிலேயே மறைத்து வைத்துள்ளார் சாகர். பின்னர், அதனை ஒரு மெத்தையில் சுற்றி எடுத்துச் சென்று, சம்பிகேஹள்ளி எம்.எஸ். நகர் பகுதியில் இருந்த செடிகள் அடர்ந்த ஒரு காலி மனையில் வீசிவிட்டுத் தலைமறைவாகியுள்ளார். காலி மனைகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற மாநகராட்சியின் உத்தரவின் பேரில், நிலத்தின் உரிமையாளர் ஆட்களை வைத்துச் சுத்தம் செய்தபோது, ஒரு மாதத்திற்கு மேலாக அழுகிச் சிதைந்த நிலையில் இருந்த அனுசூயாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. உடல் அடையாளம் காண முடியாத அளவுக்குச் சிதைந்திருந்த போதிலும், அதில் இருந்த ஆடையின் குறிச்சொல்லை வைத்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி இறந்தவர் அனுசூயா என்பதை உறுதிசெய்தனர். இதைத்தொடர்ந்து, தலைமறைவாக இருந்த சாகரைச் சம்பிகேஹள்ளி போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
