“மானமே போச்சு…” வெளிநாடு போய் இப்படியா பண்ணுவது..? தாய் தாய்லாந்தில் இந்தியர்கள் செய்த காரியம்… அலறித் துடித்த பிரபலம்..! அப்படி என்ன நடந்துச்சு தெரியுமா..?! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“மானமே போச்சு…” வெளிநாடு போய் இப்படியா பண்ணுவது..? தாய் தாய்லாந்தில் இந்தியர்கள் செய்த காரியம்… அலறித் துடித்த பிரபலம்..! அப்படி என்ன நடந்துச்சு தெரியுமா..?!

Published

on

இந்தியாவைச் சேர்ந்த டிஜிட்டல் கிரியேட்டர் ஸ்பர்ஷ் சுனில், சமீபத்தில் தாய்லாந்துக்குச் சுற்றுலா சென்றிருந்த போது அங்குள்ள ஒரு லாட்ஜில் வைக்கப்பட்டிருந்த எச்சரிக்கைப் பலகையைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்த லாட்ஜ் அறைகளுக்கு வெளியே ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக இந்தி மொழியிலும் பெரிய எச்சரிக்கை வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. உலகெங்கிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வரும் நிலையில், குறிப்பிட்ட இந்தி மொழியில் மட்டும் ஏன் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது என்ற சந்தேகத்துடன் சுனில் அந்த லாட்ஜ் உரிமையாளரிடம் நேரடியாகக் கேட்டுள்ளார். இதற்குப் பதிலளித்த லாட்ஜ் உரிமையாளர், இந்தியாவிலிருந்து பெருமளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தாலும், அவர்களில் பலர் எத்தனை முறை அறிவுறுத்தினாலும் உள்ளூர் விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை என்பதால், அவர்களது தாய்மொழியிலேயே எளிதாகப் புரிய வேண்டும் என்பதற்காகவே இந்தியில் எழுதியதாகக் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து தாய்லாந்தில் தான் கண்ட மற்றொரு கசப்பான அனுபவத்தையும் சுனில் இணையத்தில் பகிர்ந்துள்ளார். அங்குள்ள மசாஜ் சென்டர்களுக்கு வெளியே சில இந்தியச் சுற்றுலாப் பயணிகள் உள்ளூர் பெண்களிடம் வரம்பு மீறி நடந்துகொண்டதையும், அவர்களின் விருப்பமின்றிச் செல்ஃபி எடுக்கத் தொந்தரவு செய்ததையும் சுட்டிக்காட்டிய அவர், வெளிநாடு செல்லும்போது அங்குள்ள மக்களையும் அவர்களின் பண்பாட்டையும் மதிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். நாட்டின் எல்லையைக் கடந்த பிறகு நாம் அனைவரும் ‘இந்தியர்கள்’ என்ற ஒரே அடையாளத்துடனேயே அறியப்படுகிறோம் என்றும், ஒரு சிலர் செய்யும் தவறான செயல்களால் ஒட்டுமொத்த இந்தியர்களின் நற்பெயருக்கும் அவப்பெயர் ஏற்படுவது வேதனையளிப்பதாகவும் அவர் தனது வீடியோவில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் சுனிலின் இந்த வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் காரசாரமான விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், வெளிநாடுகளுக்குச் செல்லும்போது பொது இடங்களின் தனிப்பட்ட எல்லைகளை மதித்து நடக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அத்துடன், ஒரு சிலர் செய்யும் தவறுகளால் பொறுப்புள்ள மற்ற இந்தியர்களுக்குக் கெட்ட பெயர் ஏற்படுவதைத் தவிர்க்க, பாஸ்போர்ட் வழங்கும் முன்பே அடிப்படை குடிமைப் பயிற்சிகளையும் பொது ஒழுக்க விழிப்புணர்வையும் அரசு வழங்க வேண்டும் என்றும் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in