CRIME
“வீட்டு வாசலில் அமர்ந்திருந்த 10 வயது சிறுமி..” ஆட்டோவில் கடத்திச் சென்று கொடூரமாக சீரழித்த 45 வயது மிருகம்… நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
ஆந்திரப் பிரதேச மாநிலம் திருஆட்டோவில் ஏற்றி ஆள் நடமாட்டமில்லாத இடத்திற்கு கடத்திச் சென்ற 45 வயது மிருகம்!ப்பதி மாவட்டம் ரயில்வே கோடூரு பகுதியில், 10 வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே கோடூரு மண்டலத்திற்குட்பட்ட அப்பினாயுடு பல்லே கிராமத்தில் வசித்து வரும் 5-ம் வகுப்பு மாணவியான அச்சிறுமி, வீட்டின் வெளியே அமர்ந்திருந்தபோது அங்கு வந்த 45 வயதான சேரளா ரமேஷ் நாயுடு என்பவர் இந்த கொடூர அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அச்சிறுமியைத் தனது ஆட்டோவில் ஏற்றி ரயில் நிலையம் வழியாகக் கிராமத்தின் ஒதுக்குப்புறமான ஒரு பகுதிக்குக் கடத்திச் சென்று அவர் மிருகத்தனமாகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற இந்த கொடூர சம்பவம் குறித்து அச்சிறுமி பயத்தின் காரணமாக அன்று கூறாமல், மறுநாள் தனது தாயாரிடம் அழுதுகொண்டே விவரித்துள்ளார். இதனால் நிலைகுலைந்து போன சிறுமியின் பெற்றோர், உடனடியாக ரயில்வே கோடூரு காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்துப் புகார் அளித்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர், உடனடியாக குற்றவாளி ரமேஷ் நாயுடு மீது வழக்குப் பதிவு செய்து, இந்த விவகாரத்தை மிகவும் ரகசியமாக வைத்துக்கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
