CRIME
“வா மச்சான் சரக்கடிக்கலாம்..” போனில் இருந்த ‘அந்த’ வீடியோவை பார்த்த கணவன்.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே செய்த வெறிச்செயல்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
உத்தரகண்ட் மாநிலம் டெஹ்ராதூனின் மாண்டுவாலா பகுதியில், கள்ளக்காதலை கணவர் கண்டுபிடித்த ஆத்திரத்தில், மனைவியும் அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து கணவனைக் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பிரேம்நகர் பகுதியில் வசித்து வந்த மதன் என்பவரின் மனைவி மீனாதேவி, கடந்த மூன்று ஆண்டுகளாக லலன் சர்மா (23) என்ற இளைஞருடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். சமீபத்தில் லலனின் தொலைபேசியில் இருந்த தனது மனைவியின் ரகசியப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைக் கண்டு மதன் அதிர்ச்சியடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து மதன் தன் மனைவியையும் கள்ளக்காதலனையும் நேரில் வைத்துக் கண்டித்ததால், அவரைத் தீர்த்துக்கட்ட இருவரும் சேர்ந்து ஒரு கொடூரமான திட்டத்தைத் தீட்டினர்.
இத்திட்டத்தின்படி கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி, மது அருந்தலாம் என்று கூறி மதனை மாண்டுவாலா வனப்பகுதிக்கு மீனாதேவியும் லலனும் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சென்றவுடன் மறைத்து வைத்திருந்த கத்தியால் மதனின் தொண்டையை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, உடலை ஒரு பள்ளத்தாக்கில் வீசிவிட்டு இருவரும் தப்பியோடினர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு, வெறும் 12 மணி நேரத்திற்குள் இந்தக் கொலை வழக்கின் மர்மத்தை உடைத்தனர். மதனின் மரணத்திற்கு அவரது மனைவியும் கள்ளக்காதலனுமே காரணம் என்பதை உறுதி செய்த போலீசார், இருவரையும் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
