“அவ எனக்கு வேண்டாம்” கள்ளக்காதலனுடன் ஹோட்டலில் தற்கொலை செய்த மனைவி.. சடலத்தை வாங்க மறுத்த கணவன்… சுடுகாட்டிற்கே தூக்கிச் சென்று தீ மூட்ட வைத்த போலீசார்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அவ எனக்கு வேண்டாம்” கள்ளக்காதலனுடன் ஹோட்டலில் தற்கொலை செய்த மனைவி.. சடலத்தை வாங்க மறுத்த கணவன்… சுடுகாட்டிற்கே தூக்கிச் சென்று தீ மூட்ட வைத்த போலீசார்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள அவத் ஹோட்டல் அறையில், தன்னை விட பாதி வயது குறைவான கள்ளக்காதலனுடன் தற்கொலை செய்து கொண்ட பிங்கி என்ற பெண்ணின் உடலை வாங்க அவருடைய கணவர் விஜய் சர்மா மறுத்துவிட்டார். இதனால், இறுதிச் சடங்குகளைச் செய்ய எவரும் முன்வராத நிலையில், காவல் துறையினரே பிங்கியின் உடலைத் தங்களது வாகனத்தில் ஏற்றி த்ரிமுஹானி படித்துறைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அந்தப் பெண்ணின் உடலைத் தூக்கிச் செல்ல உறவினர்கள் எவரும் இல்லாத ஒரு அவல நிலை ஏற்பட்டது.

இருப்பினும், பிங்கியின் கணவரிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, அவரைச் சுடுகாட்டிற்கு அழைத்து வருவதில் வெற்றி பெற்றனர். இறுதியில், காவல்துறையினரின் முன்னிலையில் கணவர் விஜய் சர்மா தனது மனைவியின் உடலுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்து தீ மூட்டினார். கள்ளக்காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை கணவர் வாங்க மறுத்ததும், பின்னர் போலீசாரே முன்னின்று இறுதிச் சடங்குகளை நடத்தியதும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in