LATEST NEWS
“செம ஐடியா.. நாப்கினை இப்படியும் பயன்படுத்தலாமா..?” தேர்வு அறையில் பிட் அடிக்க மாணவி செய்த விபரீத காரியம்.. நெட்டிசன்களை வாயடைக்க வைத்த வீடியோ..!!
பெண்களின் மாதவிடாய் காலப் பாதுகாப்பிற்காகவும், தொற்று பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காகவும் கண்டுபிடிக்கப்பட்ட சானிட்டரி நாப்கினை, மாணவி ஒருவர் தேர்வு எழுதுவதற்காக பிட் அடிக்கப் பயன்படுத்திய விசித்திரமான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த மாணவி சானிட்டரி நாப்கினின் மீது தேர்வுக்குத் தேவையான முக்கியமான குறிப்புகளை வரிசையாக எழுதி வைத்துள்ளார்.
நாப்கினில் ஏன் இப்படி எழுதுகிறாய் என்று அவரிடம் கேட்டபோது, “சாதாரண துண்டுச் சீட்டுகளில் எழுதிக் கொண்டு போனால் சோதனையின் போது எளிதாகப் பிடித்து விடுவார்கள்; ஆனால், சானிட்டரி நாப்கினை யாரும் சோதித்துப் பார்க்க மாட்டார்கள் என்பதால், இதை எளிதாகத் தேர்வு அறைக்குள் எடுத்துச் சென்றுவிடலாம்” என்று பதிலளித்துள்ளார். யாருக்கும் சந்தேகம் வராதபடி தேர்வு அறையில் காப்பியடிப்பதற்காக அந்த மாணவி சானிட்டரி நாப்கினைப் பயன்படுத்திய விநோதமான யோசனை இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
