CRIME
அய்யயோ பதறுது..! கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனின் கழுத்தை அறுத்து… 15 ஆண்டு கால காதல் வாழ்க்கையில் நடந்த கொடூரம்… மனைவி செய்தா பயங்கரத்தால் ஷாக்..!!
உத்தரப் பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தைச் சேர்ந்த கோபால் என்பவர் ஹரியானாவின் பரீதாபாத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்தார். அவருக்கும் காஜல்) என்ற பெண்ணுக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நான்கு குழந்தைகள் இருந்த நிலையில், காஜலுக்கு அவரது சொந்தக் கிராமத்தைச் சேர்ந்த யோகேந்திரா என்ற இளைஞருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் கணவர் கோபாலுக்குத் தெரியவந்ததால் அவர்களுக்குள் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது.
தன் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவனைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்த காஜல், தனது காதலன் யோகேந்திராவுடன் இணைந்து கொலைத் திட்டம் தீட்டினார். அதன்படி, கடந்த அக்டோபர் 15, 2026 அன்று பரீதாபாத்தில் உள்ள கோபாலின் அறைக்கு வந்த இருவரும், கூர்மையான கத்தியால் கோபாலின் கழுத்தை அறுத்துத் கொடூரமாகக் கொலை செய்தனர். கொலைக்குப் பிறகு அவர்கள் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், ரத்த வெள்ளத்தில் கிடந்த கோபாலின் உடலை அவரது குடும்பத்தினர் கண்டெடுத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த பரீதாபாத் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி, முதன்மைக் குற்றவாளியான மனைவி காஜல் மற்றும் அவரது கள்ளக்காதலன் யோகேந்திரா ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு கோபாலின் உடல் அவரது சொந்த ஊரான குன்வர்பூர் கிராமத்திற்குக் கொண்டு வரப்பட்டபோது, அங்கு பெரும் சோகமும் பரபரப்பும் நிலவியது. கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
