கொடுமை..! பிணவறையில் அரங்கேறிய மது பார்ட்டி… மரண சான்றிதழுக்காக உறவினர்கள் கண்ணீருடன் காத்திருக்க, உள்ளே போதையில் மிதந்த அரசு மருத்துவர்.. உச்சகட்ட கொடூரம்..!! – cinefeeds
Connect with us

CRIME

கொடுமை..! பிணவறையில் அரங்கேறிய மது பார்ட்டி… மரண சான்றிதழுக்காக உறவினர்கள் கண்ணீருடன் காத்திருக்க, உள்ளே போதையில் மிதந்த அரசு மருத்துவர்.. உச்சகட்ட கொடூரம்..!!

Published

on

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்றான யஷ்வந்த்ராவ் சவாண் நினைவு மருத்துவமனையில் மனிதாபிமானமற்ற ஒரு அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. கடந்த அக்டோபர் 15, 2026 அன்று இரவு, மருத்துவமனையின் பிணவறைக்கு வெளியே உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மரண சான்றிதழுக்காக கண்ணீருடன் காத்துக்கொண்டிருந்தனர். ஆனால், உள்ளே பணியில் இருந்த மருத்துவ அதிகாரி டாக்டர் வைபவ் அவினாஷ் என்பவர் தனது ஊழியர்களுடன் சேர்ந்து மது அருந்தி பார்ட்டி கொண்டாடியுள்ளார்.

சான்றிதழ் வாங்க வந்த நபர் ஒருவர் நீண்ட நேரமாகியும் யாரும் வெளியே வராததால், பிணவறை ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்த்துள்ளார். அப்போது டாக்டர் வைபவ் மதுபோதையில் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அதனைத் தனது மொபைல் போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

Advertisement

இதனைத் தொடர்ந்து, பிம்பிரி-சிஞ்ச்வட் மாநகராட்சி ஆணையர் டாக்டர் விஜய் சூர்யவன்ஷி, மருத்துவ ஒழுக்க நெறிமுறைகளை மீறிய குற்றத்திற்காக டாக்டர் வைபவ்வை உடனடியாகப் பணிநீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டார். மேலும், மகாராஷ்டிர அரசு ஊழியர் நடத்தை விதிகளின் கீழ் 15 நாட்களுக்குள் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, கடுமையான துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. சஸ்பெண்ட் காலத்தில் அவர் பிணவறைத் தலைமையகத்தை விட்டு வெளியேறவும், தனியாகத் தனியார் மருத்துவத் தொழில் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in