“உன் ஆபாச வீடியோவை வைரலாக்கிடுவேன்..!” மிரட்டிய போலீஸ்… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“உன் ஆபாச வீடியோவை வைரலாக்கிடுவேன்..!” மிரட்டிய போலீஸ்… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் பியுடோனில், ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிடப்போவதாக மிரட்டிய போலீஸ் காவலரின் டார்ச்சரால், இளம் பெண் ஒருவர் ஆசிட் குடித்து தற்கொலை செய்துகொண்ட கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பிசோலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி, ஜீஷான் என்ற போலீஸ் காவலர் பழகி வந்துள்ளார். இந்த நிலையில், ஜீஷானுக்கு வேறொரு இடத்தில திருமணம் நிச்சயமாகியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் தன்னைத் திருமணம் செய்யுமாறு கோரியபோது ஜீஷான் மறுத்ததுடன், தன்னிடம் உள்ள ஆபாச வீடியோக்களை வைரலாக்கிவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இந்தக் கடுமையான மிரட்டல்களால் மனமுடைந்த அந்தப் பெண், வேறு வழியின்றி ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த பெண்ணின் சகோதரர் அளித்த புகாரின் பேரில், தலைமறைவாக இருந்த போலீஸ் காவலர் ஜீஷானைத் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, அவரது தலைக்கு ரூ.25,000 வெகுமதியும் காவல்துறை விதித்திருந்தது. தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, தலைமறைவாக இருந்த குற்றவாளி ஜீஷானைக் காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in