கலிகாலம்..! “என் அத்தையை காதலிக்கிறேன் அதான்” காட்டுக்குள் கதறிய 4 வயது குழந்தை… சிக்கிய மருமகன்… பின்னணியில் காத்திருந்த பயங்கர அதிர்ச்சி…!! – cinefeeds
Connect with us

CRIME

கலிகாலம்..! “என் அத்தையை காதலிக்கிறேன் அதான்” காட்டுக்குள் கதறிய 4 வயது குழந்தை… சிக்கிய மருமகன்… பின்னணியில் காத்திருந்த பயங்கர அதிர்ச்சி…!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவின் போத்லா பகுதியைச் சேர்ந்த ரிஸ்வானா என்ற பெண்ணிற்கு குழந்தைகள் இல்லாததால், அவரது கொழுந்தனின் 5 மற்றும் 4 வயதுடைய இரண்டு மகன்களை வளர்த்து வந்தார். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அவரது 4 வயது மருமகன் திடீரென காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீஸார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த சாபிர் என்ற வாலிபர் குழந்தையைக் கடத்திச் சென்றது தெரியவந்தது.

உடனடியாகச் சாபிரைக் கைது செய்த போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர், உறவுமுறையில் தனக்கு பெரியம்மா ரிஸ்வானாவை தான் காதலிப்பதாகவும், அவரைத் தன்னுடன் அழைத்துச் சென்றுவிட ஆசைப்பட்டதாகவும் கூறினார். ஆனால், தன்னிடம் இரண்டு குழந்தைகளின் பொறுப்பு இருப்பதாக ரிஸ்வானா கூறியதால், அவர்களுக்கு இடையூறாக இருக்கும் குழந்தைகளைக் கடத்த திட்டமிட்டதாக ஒப்புக்கொண்டார். இதற்காக முதலாவதாக 4 வயது சிறுவனைக் கடத்தி மல்புரா காட்டுப் பகுதியில் தவிக்க விட்டுள்ளார்.

Advertisement

காட்டில் விடப்பட்ட அந்தச் சிறுவன் பயந்துபோய் அழுதுகொண்டே தானாகவே சாலைக்கு வந்துள்ளான். அந்த வழியாக வந்த மல்புரா போலீஸார் குழந்தையை மீட்டு, அவனது குடும்பத்தினரைத் தேடி வந்தனர். இதற்கிடையில் போத்லா போலீஸார் குற்றவாளி சாபிரை அழைத்துக்கொண்டு அதே பகுதிக்குச் சென்று குழந்தையைப் பத்திரமாக மீட்டுக் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். மற்றோரு குழந்தையையும் கடத்தத் திட்டமிட்டிருந்த சாபிர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in