CINEMA
இசைத்துறையில் பேரிழப்பு… ‘தேனிசைத் தென்றல்’ தேவா சிகிச்சை பலனின்றி காலமானார்.. திரையுலகம் அதிர்ச்சி..!!
தேனிசைத் தென்றல்’ என்று அன்போடு அழைக்கப்படும் பிரபல மூத்த இசையமைப்பாளர் தேவா, இன்று திடீர் நெஞ்சு வலி மற்றும் உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றித் தனது 75-வது வயதில் காலமானார். கடந்த 1986-ஆம் ஆண்டு ‘மாட்டுக்கார மன்னாகு’ திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், தமிழ் சினிமாவில் ‘கானா’ பாடல்களைத் தனித்துவமான பாணியில் பிரபலப்படுத்தி அதற்கென ஒரு தனி முத்திரையைப் பதித்தவர் ஆவார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாமலை, பாட்ஷா மற்றும் விஜய்யின் குஷி உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள தேவாவின் மறைவு தமிழ் திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. தற்போது அவரது சடலம் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்படவுள்ள நிலையில், திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் லட்சக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் மல்கத் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
