LATEST NEWS
#BREAKING : யூடியூபர் ஜேசன் சாமுவேல் கைது… இன்ஸ்டா பிரபலம் ஹரிஷ் தற்கொலை வழக்கில் சற்றுமுன் பரபரப்பு..!!
இன்ஸ்டாகிராம் பிரபலம் ஹரிஷ் தற்கொலை வழக்கில், பிரபல யூடியூபர் ஜேசன் சாமுவேலை கானத்தூர் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ஹரிஷ் தற்கொலைக்குக் காரணமான அவதூறு வீடியோக்களை வெளியிட்டு, அவரைத் தற்கொலைக்குத் தூண்டியதாக ஜேசனின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உயிரிழந்த ஹரிஷின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் கானத்தூர் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். ஜேசன் சாமுவேல் வெளியிட்ட அவதூறு வீடியோக்கள் தான் தனது மகனின் தற்கொலைக்கு மிக முக்கியக் காரணம் என்று அவரது தந்தை புகாரில் குறிப்பிட்டதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜேசனைக் கைது செய்துள்ளனர்.
