“என் கல்யாணத்தைக் கெடுத்துடுவா…” 42 வயது கள்ளக்காதலிக்கு கொடூரமாக ஸ்கெட்ச் போட்ட 20 வயது வாலிபர்.. வனப்பகுதியில் கொழுந்துவிட்டு எரிந்த சடலம்.. கதிகலங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“என் கல்யாணத்தைக் கெடுத்துடுவா…” 42 வயது கள்ளக்காதலிக்கு கொடூரமாக ஸ்கெட்ச் போட்ட 20 வயது வாலிபர்.. வனப்பகுதியில் கொழுந்துவிட்டு எரிந்த சடலம்.. கதிகலங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

ஆந்திரப் பிரதேச மாநிலம் ஏலூரு மாவட்டத்தில், 41 வயது கள்ளக்காதலி தனது திருமணத்திற்கு இடையூறாக இருப்பார் என்ற அச்சத்தில், 20 வயது வாலிபர் அவரை கொடூரமாகக் கொலை செய்து உடலை எரித்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உங்குட்டூரு மண்டலம் ராவுலபர்ரு பகுதியைச் சேர்ந்த சந்தியாராணி என்ற பெண், தனது கணவருடன் சேர்ந்து மளிகைக் கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கும் அஜய் என்ற ஆட்டோ ஓட்டுநருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

சமீபத்தில் அஜய்யின் குடும்பத்தினர் அவருக்குத் திருமண ஏற்பாடுகளைச் செய்ததால், அவர் சந்தியாராணியை விட்டுத் தூரமாக விலக முயன்றுள்ளார். இதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி கடுமையான தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளன. தனது திருமணத்திற்குச் சந்தியாராணி தடையாக இருப்பாரோ என்று பயந்த அஜய், அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டார். அதன்படி, அக்டோபர் 23ஆம் தேதி சந்தியாராணியை ஆட்டோவில் அழைத்துக்கொண்டு நாச்சுகுண்டா வனப்பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு வைத்து கத்தியால் அவரது தொண்டையை அறுத்து, உடல் முழுவதும் பலமுறை குத்திக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

Advertisement

கொலை செய்த பின்னர், சந்தியாராணியின் உடலில் இருந்த தங்க நகைகள் மற்றும் கைப்பேசியைப் பறித்துக்கொண்ட அஜய், உடலின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். சந்தியாராணி காணாமல் போனது குறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரிலும், வனத்துறையினர் கொடுத்த தகவலின் பேரிலும் போலீசார் விசாரணையைத் தொடங்கினர். காட்டில் கண்டெடுக்கப்பட்ட உடல் சந்தியாராணியுடையது என்பதை உறுதி செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி அஜய்யைக் கைது செய்து, அவரிடமிருந்த தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in