“மகள்களை மீட்டு தாங்க…” ஒரே வீட்டில் அடுத்தடுத்து மாயமான இரு மைனர் சகோதரிகள்.. தந்தை கொடுத்த புகாரில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்..!! – cinefeeds
Connect with us

CRIME

“மகள்களை மீட்டு தாங்க…” ஒரே வீட்டில் அடுத்தடுத்து மாயமான இரு மைனர் சகோதரிகள்.. தந்தை கொடுத்த புகாரில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தின் ஹசன்கஞ்ச் பகுதியில், 16 மற்றும் 13 வயதுடைய இரண்டு மைனர் சகோதரிகள் திடீரென மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துபேகடி கிராமத்தைச் சேர்ந்த ரஜினிஷ் என்பவரது இரு மகள்களும் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், இதுவரை வீடு திரும்பவில்லை. அவுராய் பகுதியைச் சேர்ந்த சந்தீப் என்ற வாலிபர் மூத்த மகளையும், சஃபிபூர் பகுதியைச் சேர்ந்த சுர்ஜித் என்ற வாலிபர் இளைய மகளையும் ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்றுவிட்டதாகப் பெண்களின் தந்தை பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மேலும், தனது மூத்த மகளைத் தங்களுக்குத் திருமணம் செய்து தராவிட்டால் கடத்திச் சென்றுவிடுவோம் எனச் சந்தீப்பின் குடும்பத்தினரான மனோஜ், சூரஜ், ஆனந்த் மற்றும் தீரஜ் ஆகியோர் மிரட்டல் விடுத்ததாகவும், சுர்ஜித் தனது இளைய மகளிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாகவும் தந்தை புகாரில் குறிப்பிட்டுள்ளார். தங்களது இரு மகள்களுக்கும் ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிடுமோ எனப் பெற்றோர் அஞ்சுவதுடன், அவர்களைப் பத்திரமாக மீட்டுத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து ஹசன்கஞ்ச் காவல் நிலைய பொறுப்பாளர் சரத் குமார் கூறுகையில், தந்தையின் எழுத்துப்பூர்வ புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in