“பெரிய சைஸா பார்த்து கொடுங்க…” ஆசையாகச் சாப்பிட்ட கடைசி பானிபூரி.. நடுரோட்டில் அலறிய பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. பரபரப்பு பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“பெரிய சைஸா பார்த்து கொடுங்க…” ஆசையாகச் சாப்பிட்ட கடைசி பானிபூரி.. நடுரோட்டில் அலறிய பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. பரபரப்பு பின்னணி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் ஔரையாவில், காலையிலிருந்து பானிபூரி சாப்பிட ஆசைப்பட்ட பெண் ஒருவர், கடையில் பெரிய அளவிலான பானிபூரிகளைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிட்ட போது அவரது தாடை லாக் ஆகி வாய் மூட முடியாமல் போன விசித்திர மருத்துவ அவசரநிலை அரங்கேறியுள்ளது. தன் கணவர் வாங்கித் தராததால் ஆத்திரமடைந்த அப்பெண், அவராகவே சந்தைக்குச் சென்று பானிபூரி கடைக்காரரிடம் தனக்குப் பெரிய அளவிலான பானிபூரிகளைத் தருமாறு கேட்டுள்ளார். கடையில் இருந்த பெரிய பானிபூரிகளைத் தேடிப்பிடித்து சுமார் 10 பானிபூரிகளை அவர் அடுத்தடுத்துச் சாப்பிட்டுள்ளார்.

ஆனால், அவர் சாப்பிட்ட கடைசிப் பெரிய பானிபூரி அவருக்குப் பெரும் விபரீதமாக முடிந்தது. அதனை வாய்க்குள் திணித்த அடுத்த கணமே, அவரது வாய் அப்படியே அகலமாகத் திறந்து கொண்டதுடன், தாடை எலும்பு லாக் ஆனதால் அவரால் வாயை மூடவே முடியாமல் போனது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரது கணவருக்குத் தகவல் கொடுக்க, அவர் விரைந்து வந்து மனைவியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்குள்ள மருத்துவர்கள் தாடையைச் சரி செய்யப் பலவாறு முயன்றும் வாய் மூடாததால், மேல் சிகிச்சைக்காக அப்பெண் பெரிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆசையாகச் சாப்பிடச் சென்ற இடத்தில் நேர்ந்த இந்த விபரீதம் அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in