“உயிரைக் காப்பாத்திக்கோங்க..!” வீடுகளை மூழ்கடித்த உப்படா கடல் சீற்றம்.. அலறியடித்து ஓடும் மக்கள்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

“உயிரைக் காப்பாத்திக்கோங்க..!” வீடுகளை மூழ்கடித்த உப்படா கடல் சீற்றம்.. அலறியடித்து ஓடும் மக்கள்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

Published

on

ஆந்திர மாநிலம் காகினடா மாவட்டத்தில் தீவிரமடைந்துள்ள புயல் பாதிப்பு காரணமாக, உப்படா கடலோரப் பகுதியில் கடல் அலைகள் சீற்றத்துடன் எழும்பி, கடல் நீர் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புயலின் கோரத் தாண்டவத்தால் கடல் நீர் முதலில் பிரதான சாலைகளை மூழ்கடித்ததுடன், தற்போது கரையோரம் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள்ளும் புகுந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

கடல் நீர் தொடர்ந்து வீடுகளுக்குள் புகுந்து வருவதைக் கண்டு அச்சமடைந்த உள்ளூர் பொதுமக்கள், தங்களின் உடைமைகளைப் பாதுகாத்துக் கொண்டு உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். மாவட்ட நிர்வாகத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் அனைவரும் பாதுகாப்பான தங்குமிடங்கள் மற்றும் புயல் நிவாரண முகாம்களுக்கு தற்காலிகமாக இடம்பெயர்ந்து வருகின்றனர். கடலோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளுக்குக் காகினடா மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in