“மாணவியின் மொபைலை பிடுங்கி அசிங்கம்..” பள்ளிக்குள் ஊர் மக்கள் திரண்டதும் காமுக ஆசிரியர் செய்த ‘அந்த’ காரியம்.. திடுக்கிடும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“மாணவியின் மொபைலை பிடுங்கி அசிங்கம்..” பள்ளிக்குள் ஊர் மக்கள் திரண்டதும் காமுக ஆசிரியர் செய்த ‘அந்த’ காரியம்.. திடுக்கிடும் பின்னணி..!!

Published

on

இந்தோனேசியாவின் வட சுமத்ரா மாகாணம் டெலி செர்டாங் மாவட்டத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில், பள்ளி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மதபோதக ஆசிரியர் ‘J’ என்பவரை ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மற்றும் ஊர் மக்கள் முற்றுகையிட்டுப் பிடித்தனர். பாதிக்கப்பட்ட மாணவி பள்ளி வளாகத்திற்குள் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்துப் பெற்றோரிடம் கூறியுள்ளார். மேலும், அந்த மாணவியின் மொபைல் போனைப் பறிமுதல் செய்த ஆசிரியர், அதிலிருந்த உள்ளடக்கங்களை தவறான முறையில் கையாண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் குடும்பத்தினரும் பொதுமக்களும் செவ்வாய்க்கிழமை அன்று பள்ளிக்குத் திரண்டு வந்து அந்த ஆசிரியரை முற்றுகையிட்டனர்.

பொதுமக்கள் தங்களைச் சூழ்ந்து கொண்டு கேள்வி எழுப்பியவுடன், தப்பிக்க வழியில்லாத அந்த மதபோதக ஆசிரியர் உடனடியாக மயங்கி விழுந்தது போல நடித்து நாடகமாடியுள்ளார். இதனால் பள்ளியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகமும் நாமோ ராம்பே காவல் நிலைய போலீசாரும் இணைந்து ஆசிரியரைத் தற்காலிகமாக அலுவலக அறைக்குள் பூட்டிப் பாதுகாத்தனர். பின்னர், கோபமடைந்த கூட்டத்திலிருந்து அவரை மீட்ட போலீசார், உரிய சட்ட நடவடிக்கைகளுக்காகக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in