LATEST NEWS
“அம்மா… அம்மா…” தாயின் கையைப் பிடித்துக் கதறிய குழந்தை.. நடுரோட்டில் தம்பதிக்கு நேர்ந்த காட்டுமிராண்டித்தனமான கொடுமை.. பார்ப்போரை கலங்கடிக்கும் நெஞ்சை உலுக்கும் வீடியோ..!!
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கணவன், மனைவி முகத்தில் கறுப்பு மை பூசப்பட்டு, காலணி மாலைகளுடன் வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படும் நெஞ்சை உலுக்கும் காட்சி பதிவாகியுள்ளது. அவர்கள் இருவர் மீதும் என்ன குற்றம் சுமத்தப்பட்டது என்ற முழு விவரம் தெரியவில்லை என்றாலும், அந்தப் பெண்ணின் அருகில் அவளது கைகளைப் பிடித்துக்கொண்டு ஒரு பிஞ்சு குழந்தை அழுதுகொண்டே நடந்து செல்லும் காட்சி பார்ப்போரின் கண்களைக் குளமாக்குகிறது. இந்த கொடூரமான சம்பவத்தை சுற்றியுள்ள ஊர் மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு வருகிறார்களே தவிர, யாரும் தடுத்து நிறுத்த முன்வரவில்லை.
அந்தச் சிறு குழந்தையின் அழுகையையும், பயத்தையும் கூட பொருட்படுத்தாமல் கிராம மக்கள் இவ்வாறு காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொள்வது சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டிய காவல்துறை மற்றும் நிர்வாகம் அங்கே இல்லையா என்ற பலத்த கேள்வியும் நெட்டிசன்களிடையே எழுந்துள்ளது. ஒரு தவறு நடந்திருந்தால் அதற்குச் சட்டப்படி தண்டிப்பதை விட்டுவிட்டு, ஒரு சிறு குழந்தையின் முன்னிலையில் அந்தப் தாய்க்கு இத்தகைய அசிங்கமான தண்டனையை வழங்குவது மனிதநேயமற்ற செயல் எனப் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
