“அவ யாரை பார்க்குறான்னு சொல்லுங்க…” பிரேக்பப் ஆன கடுப்பில் 97 முறை RTI போட்ட எக்ஸ் காதலன்… விசாரித்த அதிகாரி கொடுத்த அதிர்ச்சி அட்வைஸ்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அவ யாரை பார்க்குறான்னு சொல்லுங்க…” பிரேக்பப் ஆன கடுப்பில் 97 முறை RTI போட்ட எக்ஸ் காதலன்… விசாரித்த அதிகாரி கொடுத்த அதிர்ச்சி அட்வைஸ்..!!

Published

on

தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. ஏ. சந்தோஷ் என்ற இளைஞர், காதலித்து பிரிந்த தனது முன்னாள் காதலியின் ஒவ்வொரு நகர்வையும் கண்காணித்து தெரிந்துகொள்வதற்காக, காவல்துறையிடம் ஒன்று இரண்டு அல்ல… மொத்தம் 97 தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார். காவல்துறை இதற்குப் பதிலளிக்காததால், அந்த இளைஞர் நேரடியாக மாநில தகவல் ஆணையத்தில் புகார் செய்தார்.

விசாரணையில், சந்தோஷும் அந்தப் பெண்ணும் 2021 முதல் 2025 வரை ஒன்றாகப் படித்தபோது காதலித்து வந்ததும், 2025 நவம்பரில் ஏற்பட்ட மனக்கசப்பால் அந்தப் பெண் பிரிந்து சென்றதும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர், 2025 நவம்பர் முதல் 2026 ஜூன் வரையிலான 7 மாதங்களில் 97 RTI மனுக்கள் மூலம் 1,887 கேள்விகளைக் கேட்டுள்ளார். அந்தப் பெண் எங்கே செல்கிறார், யாரைச் சந்திக்கிறார், வேறு யாருடனாவது பழகுகிறாரா எனப் பெண்ணின் தனிப்பட்ட விஷயங்களை அறியவே RTI சட்டத்தை அவர் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்.

Advertisement

மாநில தகவல் ஆணையர் வி.பி.ஆர். இளம்பரிதி முன்னிலையில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இதுகுறித்த அறிக்கையைச் சமர்ப்பித்தார். அதில், ஏற்கெனவே பதிலளிக்கப்பட்ட போதிலும் ஒரே மாதிரியான கேள்விகளைக் கேட்டு RTI சட்டத்தை அந்த இளைஞர் தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறப்பட்டது. அனைத்து விவரங்களையும் கேட்டறிந்த தகவல் ஆணையம், அந்த இளைஞரைக் கடுமையாகக் கண்டித்ததோடு, அவருக்கு மனநல சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தியது. மேலும், மீண்டும் இதுபோன்று செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in