“ஹோம் ஒர்க் ரொம்ப சிம்பிள்..! இனி உங்க வீட்டு மின் கட்டணத்தை நீங்களே கணக்கெடுக்கலாம்… மின்சார வாரியத்தின் சூப்பர் திட்டம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஹோம் ஒர்க் ரொம்ப சிம்பிள்..! இனி உங்க வீட்டு மின் கட்டணத்தை நீங்களே கணக்கெடுக்கலாம்… மின்சார வாரியத்தின் சூப்பர் திட்டம்..!!

Published

on

மின் கணக்கீட்டாளர்கள் பற்றாக்குறையை போக்கும் வகையில் நுகர்வோரே நேரடியாக தங்கள் மின் மீட்டரை படம் பிடித்து மின் கட்டணத்தை அறிந்துகொள்ளும் புதிய வசதியை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிமுகப்படுத்த உள்ளது.

அதன்படி, மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ செல்போன் செயலியில் ‘சுய கணக்கீடு’ என்ற புதிய வசதி சேர்க்கப்பட உள்ளது. நுகர்வோர்கள் தங்கள் மின் மீட்டரில் உள்ள அளவீட்டை செயலி மூலம் புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்தால், மென்பொருள் தானாகவே இரு மாதத்திற்கான மின் பயன்பாட்டை கணக்கிட்டு மின் கட்டண பட்டியலை உருவாக்கும். மேலும், இந்த கட்டண விவரம் நுகர்வோரின் செல்போன் எண் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும்.

Advertisement

முதற்கட்டமாக இன்னும் இரு வாரங்களில் தேர்வு செய்யப்பட்ட சில பகுதிகளில் இந்த வசதி சோதனை முறையில் அமல்படுத்தப்பட உள்ளது. மேலும், வரும் டிசம்பர் மாதத்திற்குள் தமிழ்நாடு முழுவதும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மின் கணக்கீடு தாமதமாவது மற்றும் தவறான கட்டணம் விதிக்கப்படுவது போன்ற புகார்களுக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in