“நான் இந்து… என் முறைப்படி கல்யாணம் நடத்தினேன்..” துரைமுருகன் வருத்தம் தெரிவித்தும் ஓயாத சர்ச்சை.. பொங்கிய சம்பந்தி கண்ணன் ரவி கொடுத்த அதிரடி விளக்கம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நான் இந்து… என் முறைப்படி கல்யாணம் நடத்தினேன்..” துரைமுருகன் வருத்தம் தெரிவித்தும் ஓயாத சர்ச்சை.. பொங்கிய சம்பந்தி கண்ணன் ரவி கொடுத்த அதிரடி விளக்கம்..!!

Published

on

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனின் பேத்தியும், வேலூர் தொகுதி தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்தின் மகளுமான செந்தாமரைக்கும், பிரபல தயாரிப்பாளர் கண்ணன் ரவியின் மகன் தீபக் ரவிக்கும் கடந்த 1-ந்தேதி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் வைதீக முறைப்படி நடைபெற்றது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அதிருப்தி தெரிவித்திருந்தார். இதனிடையே, தனது பேத்தியின் வற்புறுத்தலின்பேரில்தான் வைதீக முறைப்படி திருமணத்தை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும், இந்நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் துரைமுருகன் தெரிவித்திருந்தார். மேலும், இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில், தயாரிப்பாளரும், துரைமுருகனின் சம்பந்தியுமான கண்ணன் ரவி, சென்னையில் நடைபெற்ற ஒரு திரைப்பட விழாவில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், வைதீக முறைப்படி நடந்த அவரது இல்லத் திருமண விழா குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய அவர், “கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் அவரவர் முறைப்படி திருமணத்தை நடத்துகிறார்கள். நான் ஒரு இந்து. அதனால் எங்கள் முறைப்படி திருமணத்தை நடத்தினேன். அதில் என்ன தவறு இருக்கிறது. திருமணம் என்பது கட்சி சார்ந்த விஷயம் கிடையாது, அது எங்கள் தனிப்பட்ட விஷயம்” என்று தெரிவித்தார்.

Advertisement

மேலும் அவர் பேசுகையில், “இருவீட்டார் சம்மதத்துடன் நடைபெறும் திருமணம் என்பதால், திருமணத்தை எப்படி நடத்த வேண்டும் என்பதை முடிவு செய்ய எனக்கு உரிமை உள்ளது. யார் தடுத்தாலும் எனது மதம், இனத்திற்கு உள்ள உரிமையை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன். தி.மு.க.வில் இருப்பவர்களின் குடும்பத்தினர் எல்லாம் கோவில்களுக்கு சென்று கொண்டுதானே இருக்கிறார்கள்? அவர்கள் சொந்தத்தையே கட்டுப்படுத்தாதவர்கள் எதற்கு வெளியில் பேச வேண்டும்? எனக்கு யாரைப் பார்த்தும் பயம் கிடையாது. நான் எந்த அரசியல்வாதிக்கும் பினாமி கிடையாது. நான் பினாமி என நிரூபித்தால் ரூ.1 கோடி தருகிறேன்” எனத் தெரிவித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in