“நான் சாகப்போகிறேன்..” உறவினர்களுக்கு லொகேஷன் அனுப்பிவிட்டு… 2 குழந்தைகளை இடுப்பில் கட்டிக்கொண்டு தாய் செய்த பதைபதைக்கும் காரியம்.. கதி கலங்க வாய்க்கு பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“நான் சாகப்போகிறேன்..” உறவினர்களுக்கு லொகேஷன் அனுப்பிவிட்டு… 2 குழந்தைகளை இடுப்பில் கட்டிக்கொண்டு தாய் செய்த பதைபதைக்கும் காரியம்.. கதி கலங்க வாய்க்கு பின்னணி..!!

Published

on

தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் கணவனின் கள்ளக்காதல் விவகாரத்தால் மனமுடைந்த தாய், தனது இரண்டு குழந்தைகளையும் இடுப்பில் கட்டிக்கொண்டு ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது. ஹனுமக்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த மமதா (30) என்ற பெண், கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஈனெல்லி சுமன் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஹரிணி (4), காவ்யா ஸ்ரீ (3) என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். சுமன் கூலித் தொழிலாளியாகவும், மமதா நர்சம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் கண் மருத்துவமனையிலும் வேலை பார்த்து வந்தனர்.

சுமனுக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டு, கடந்த 20 நாட்களுக்கு முன்பு அவரோடு ஓடிவிட்டார். பின்னர் ஊர் பஞ்சாயத்து கூடி சுமனை அவரது மனைவியுடன் வாழுமாறு அறிவுறுத்தியது. இதனால் தம்பதியினர் நர்சம்பேட்டை மண்டலத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தனர். ஆனால், சுமன் மீண்டும் அந்தப் பெண்ணுடன் ஓடிவிட்டதால், மமதா தனது வீட்டிற்குத் திரும்பினார். அப்போது கள்ளக்காதலி தனது உறவினர்களுடன் வந்து மமதாவை கடுமையாகத் திட்டி அவமானப்படுத்தியுள்ளார். இந்த அவமானத்தைத் தாங்க முடியாத மமதா, வேலைக்குச் செல்வதாகக் கூறி குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.

Advertisement

பாக்கலா ஏரியை அடைந்த மமதா, ஹைதராபாத்தில் உள்ள தனது உறவினர்களுக்கு தான் சாகப்போவதாகக் கூறி தனது லொகேஷனை பகிர்ந்துள்ளார். பின்னர் தனது இரண்டு குழந்தைகளையும் இடுப்பில் ஒன்றாகக் கட்டிக்கொண்டு ஏரியில் குதித்தார். உறவினர்கள் மமதாவின் போனுக்குத் தொடர்ந்து அழைத்தபோது, அங்கிருந்த ஏரி ஊழியர்கள் போனை எடுத்துப் பேசியுள்ளனர். விபரமறிந்து ஊழியர்கள் தேடியதில் மமதா மற்றும் இரு குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்டன. மகள் மற்றும் பேரக்குழந்தைகள் இறந்த செய்தியறிந்தும் மமதாவின் பெற்றோர் சம்பவ இடத்திற்கு வராதது அங்குள்ள மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in