LATEST NEWS
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி..! ஒன்னு இல்ல மேலும் ஒரு பெண்ணுடன் ரகசியத் தொடர்பில் இருந்த என்விடியா சிஇஓ..? வெளியான பகீர் தகவல்கள்..!!
உலக புகழ்பெற்ற என்விடியா (NVIDIA) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான ஜென்சன் ஹுவாங் (63), சீன பெண் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாகவும், அதுகுறித்து அவர் தனது மனைவிக்குத் துரோகம் செய்துவிட்டதாகப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அந்தப் பெண் சீன உளவுத்துறையுடன் தொடர்புடையவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.
ஜென்சன் ஹுவாங் சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாகவும், என்விடியா நிறுவனத்தின் முக்கியத் தகவல்களை அவர் வெளிநாட்டிற்கு கசியவிட்டிருக்கலாம் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தேசிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை சார்ந்த விவகாரமாகப் பார்க்கப்படுவதால், அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து என்விடியா நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவினர் சுயாதீன விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். இதற்கிடையே, தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், தான் தனது மனைவிக்குத் துரோகம் இழைத்துவிட்டதாகவும், தனது குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கோருவதாகவும் ஜென்சன் ஹுவாங் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது டெக் உலகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
