LATEST NEWS
“70 எம்.எல்.ஏக்கள் தனி அணியாகப் பிரிய முடிவு” த.வெ.க கூடாரத்தில் வெடிக்கும் பூகம்பம்… அதிர்ச்சியில் முதல்வர் விஜய்..?
செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ். ரகுபதி, தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க) 70 எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
குதிரை பேரத்தில் ஈடுபட வேண்டிய அவசியம் தி.மு.க-விற்கு இல்லை என்று கூறியுள்ள அவர், குதிரை பேரம் செய்யும் அளவிற்குத் தங்கள் கட்சியில் யாரிடமும் பணபலம் கிடையாது என்றும் விளக்கமளித்துள்ளார். ஆனால், மக்களிடம் மனமாற்றத்தை உருவாக்கக்கூடிய சக்தி தி.மு.க-விற்கு உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைக்கு மக்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கண்டு, த.வெ.க எம்.எல்.ஏக்கள் சிலர் தனி அணியாகச் செயல்பட முடிவு எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளதாக ரகுபதி சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாகவே முதல்வர் விஜய், எம்.எல்.ஏக்களை அடிக்கடி அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.
