CRIME
நம்பிக்கை துரோகத்தின் உச்சம்..! “வீட்டைப் பார்த்துக் கொள்ள வைத்தவரே எமனாக மாறிய கொடூரம்” – ரூ.4 லட்சம் சூதாட்டக் கடனுக்காக 3 உயிர்கள் பலி.. பகீர் பின்னணி..!!
அசாம் மாநிலம் திப்ருகாரில் ஒன்பது வயது குழந்தையும் அதன் பெற்றோரும் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவத்தில், ஆன்லைன் விளையாட்டில் ரூ. 4 லட்சம் இழந்த வாடகைதாரர் ராஜு தாஸ் மற்றும் அவரது கூட்டாளி அமீர் தாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தந்தையிடம் வாங்கிய கடனை அடைப்பதற்காக இந்தக் கொடூரக் கொள்ளை மற்றும் கொலைத் திட்டத்தை அவர்கள் தீட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவத்தில், ஒயில் இந்தியா நிறுவனத்தின் ஓய்வுபெற்ற அதிகாரியான சந்திரகாந்த பியான், அவரது மனைவி எலிசா புியான் மற்றும் அவர்களின் மகள் ஆகியோர் இரும்புத் தடி மற்றும் சுத்தியலால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். கொலைக்குப் பிறகு வீட்டில் இருந்த தங்கம், வெள்ளி நகைகள், பணம் மற்றும் கைப்பேசிகளைத் திருடிக்கொண்டு தப்பியோடிய குற்றவாளிகள், சிவசாகர் ரயில் நிலையத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சுமார் ரூ. 15,000 ரொக்கம், மதிப்புமிக்க நகைகள் மற்றும் மூன்று கைப்பேசிளைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் விசாரணையைத் தொடர்ந்து, குற்றவாளிகள் தப்பியோடி பெங்களூருக்குச் செல்ல திட்டமிட்டிருந்ததும், சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்பே தொலைபேசி மூலம் இந்தக் கொள்ளைச் சதித் திட்டத்தைத் தீட்டியதும் காவல்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
