“என்னைக் கொல்ல சதி நடக்குது.. அவர்தான் காரணம்..!” 5 ஆண்டுகள் உழைத்த ஜனசேனா தொண்டரின் கண்ணீர் வாக்குமூலம்.. வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என்னைக் கொல்ல சதி நடக்குது.. அவர்தான் காரணம்..!” 5 ஆண்டுகள் உழைத்த ஜனசேனா தொண்டரின் கண்ணீர் வாக்குமூலம்.. வைரல் வீடியோ..!!

Published

on

ஜனசேனா கட்சியின் தலைவர்கள் மீது அக்கட்சியைச் சேர்ந்த தொண்டர் தரணி கிருஷ்ணா சுமத்தியுள்ள அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு முதல் ஜனசேனா கட்சிக்காகத் தீவிரமாக உழைத்து வரும் தன்னை, அக்கட்சியின் தலைவர்களே தற்போது பலிகடாவாக்கி விட்டதாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும், தன்னைக் கொல்ல சதி நடப்பதாகவும், என்னைப் போல கட்சியால் வேறு யாரும் பலிகடா ஆகிவிடக் கூடாது என்றும் அவர் வெளியிட்டுள்ள உருக்கமான வாக்குமூலம் பொதுமக்களிடையே பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.

தொடர்ந்து பேசிய தரணி கிருஷ்ணா, கட்சித் தலைவர்கள் காவல்துறையினரை ஏவி விட்டுத் தன்னைக் கடுமையாகத் தாக்கச் செய்ததாகவும், தனது அந்தரங்க உறுப்புகளில் கூடத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தான் கட்சிக்கு உழைத்த காலத்தில் தனக்கோ அல்லது தனது வங்கிக் கணக்கிற்கோ அவர்கள் எந்தவொரு பணமும் வழங்கவில்லை என்பதை யாரிடம் வேண்டுமானாலும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் எனவும் அவர் சவால் விடுத்துள்ளார். இறுதியாக, “அவர்கள் எப்படியும் என்னைக் கொல்லத்தான் போகிறார்கள்; என் மரணத்திற்கு கே.கே (KK) என்பவர் தான் முழுக்க முழுக்கக் காரணம்” என அவர் குறிப்பிட்டுள்ள தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in